.comment-link {margin-left:.6em;}

Tuesday, March 28, 2006

 

நான் பெற்ற/உணர்ந்த விளக்கம் -2

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

எல்லோரும் உணர்ந்த விளக்கம்.
உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

கல்லைக் கண்டால் நாயகனை காணோம்! நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!!" என்பதுதான் "நாயகன்(இறைவன்)" = நாய் ஆக மறுவியாதகவும் ஒரு கூற்று உண்டு.

நான் பெற்ற/உணர்ந்த/புதைந்துள்ள விளக்கம்

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு நாய் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே நாயை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் நாயாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

இங்கே புதைந்துள்ளது எளிமைப் படுத்தப் பட்ட மந்திரம்.

மூல மந்திரம்...திருமூலர் சொன்ன திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

- திருமந்திரம்

தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.

யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை.

இப்படித்தான், இவ்வுலகை, உலகமாகப் பார்க்கும் மனிதனுக்கு, உலகை இயக்கும் பரம் பொருள் தெரியவில்லை.

உலகையே (அதற்குக் காரணமான) பரம் பொருளாகப் பார்ப்பவனுக்கு உலகம் தெரிவதில்லை.

Comments:
This comment has been removed by a blog administrator.
 
வெற்றிவேல் ஸார், கலக்கிட்டீங்க.
பள்ளிக்கூடத்தில் இந்தப் பாடம் நடத்திய தமிழ் மிஸ்ஸை ஞாபகத்திற்குக் கொண்டுவந்துட்டீங்க. வாழ்க்கையில் பல விஷயங்களுக்குச் சரியாகப் பொருள்புரியாமல் பலவற்றை மிஸ் பண்ணியுள்ளேன்.

கல்லைக்கண்டால் நாயைக்காணும்.....குமரி அனந்தன் துக்ளகில் பழமொழிகளின் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைக்கும்போது விளக்கியதாக நினைவு. மீண்டும் நினைவுபடுத்துயமைக்கு நன்றி.

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?