.comment-link {margin-left:.6em;}

Saturday, May 20, 2006

 

நாட்டுப் புறப் பாடல்

தமிழ் வளர்ந்தது, வளர்வது, வாழ்வது எப்படி யென்று கேட்டால், தமிழருக்கே உரித்தான கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் ஒரு காரணம் என்று பதில் சொல்லலாம்.

வாய்மொழியாக வந்த நாட்டுப் புறப் பாடல்களில் இவை ஏராளம்.
என் தாயாருக்கு அவருடைய பாட்டி மூலம் சொல்லப்பட்ட பாடல்கள் பல. இந்தப் பாடல்களின் சுவை வியந்து அவற்றை இன்றைய நாட்டுப்புற பாடலாராய்ச்சியாளர் ஒருவர் தன் பாடல் தொகுப்பில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

மாதிரிக்கு ஒன்று இங்கே.

முல்லு முணை மேலே மூணு குளம் வெட்டி வைத்தேன்
ரெண்டு குளம் பாழ், ஒண்ணு தண்ணியே இல்லை

தண்ணியில்லாத குளத்துக்கு வந்த கொசவன் மூணு பேரு
ரெண்டு பேரு நொண்டி, ஒருத்தனுக்கு கையே இல்லை

கையில்லாத கொசவன் பண்ணுனது மூணு சட்டி
ரெண்டு சட்டி பச்சை, ஒண்ணு வேகவே இல்லை

வேகாத சட்டியில போட்டதுதான் மூணு அரிசி
ரெண்டரிசி பச்சை, ஒண்ணு வேகவே இல்லை

வெகாத சோத்துக்கு விருந்தாளி மூணு பேறு
ரெண்டு பேரு பட்டிணி, ஒருத்தன் திண்ணவே இல்லை

திண்ணாத விருந்தாளிக்கு விட்டதுபார் மூணு எருமை
ரெண்டெருமை கொட்டு, ஒண்ணு ஈணவே இல்லை

ஈணாத எருமைக்கு விட்டதுவோ மூணு காடு
ரெண்டு காடு சொட்ட, ஒண்ணு பில்லே இல்லை

பில்லில்லாத காட்டுக்கு கந்தாயம் மூணு பணம்
ரெண்டு பணம் சொல்லை, ஒண்ணு செல்லவேயில்லை

செல்லாத பணத்துக்கு கணக்குப் பிள்ளை மூணு பேரு
ரெண்டு பேரு நொல்லை, ஒருத்தனுக்கு கண்ணே இல்லை

கண்ணில்லாத கணக்குப்பிள்ளைக்கு பொண்டாட்டி மூணு பேரு
ரெண்டு பேரு மொட்டை, ஒருத்திக்கு முடியே இல்லை.

---இதுதான் அன்றைய காணா பாடலா? ( வாலமீணுக்கும் வலங்கை மீணுக்கும் கல்யாணம்...னு யாரோ முணுமுணுக்கரமாதிரி இருக்கு)

அன்பன்,


மு.வெற்றிவேல்

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?