.comment-link {margin-left:.6em;}

Tuesday, October 14, 2008

 

சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி

ரூ 60 கோடி பணப்புழக்கத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி.சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி
"போதிய பணப்புழக்கம் இல்லாததே தற்போதைய பிரச்னைக்கு காரணம். பணப்புழக்கத்தைச் சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது." - மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை.

[ பணவீக்கம் 11.80 சதம் என்பது அடுத்த பத்தி செய்தி. இது பிற உலக நாடுகளை விட மிக மிக அதிகம்.]
-- தினமலர் செய்தி
பங்கு சந்தை சரிவிற்கு இவ்வளவு அதிரடி நடவடிக்கை தேவையா? இதன் மூலம் யாரைக் காப்பாற்ற மற்றும் யாரை ஓட்டாண்டியாக்க இந்த முடிவு.
பங்குகளின் விலை அந்தந்த நிறுவனங்களின் உண்மை உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு இருந்தால் இந்த சரிவு ஏற்பட்டிருக்குமா. ஊக வணிகர்களின் குறுக்கு வழி லாபத்திற்காக ஏரிய விலை இறங்கினால் யாருக்கு இழப்பு? எந்த நிறுவங்களின் பங்குகள் வீழ்ச்சியுற்றன, எந்த நிறுவனங்களின் பங்குகள் அவ்வளவாக பாதிக்க வில்லை என்ற விரிவான ஆரய்ச்சி செய்ய வேண்டாமா?
இந்த நிலையில் கவர்ச்சி காட்டி சாமாண்யர்களை பங்குச் சந்தைக்குள் இழுக்கும் முயற்சிதானே இந்த பணப் புழக்க அறிவிப்பு.
நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்காதா? அதிகரிக்கப்பட்ட பணப்புழக்கத்தால் ஏறபடப் போகும் விலை ஏற்றத்தால் பாதிக்கப் படப் போவது யார்.
நாட்டின் உள் கட்டமைப்பு வசதிக்காகவோ, விவசாயமும் தொழிசாலைகளும் எதிர்கொள்ளும் மின்வெட்டு போன்ற பிரச்னைக்கு ஏன் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் இல்லை.
இந்தியத் திருநாடும், சாமாண்ய இந்தியனும் எக்கேடு கெட்டால் என்ன.

பங்குகளின் விலையை அந்தந்த நிறுவங்களின் உண்மை லாபத்திறனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் உயர்த்தி விளையாடி பணம் பண்ணும் மோசமான வியாபாரிகள், சுய லாபத்திற்காக இதற்காகத் துணை போகும் நிறுவன முதலீட்டு-மேலாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் காப்பாற்றுவதுதான் இன்றைய அரசின் முக்கியப் பணியாக இருக்கிறது.
பாவம் சாமாண்ய இந்திய மக்கள்

Labels:


Comments:
from Ahamed Zubair A Re: சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி


முதலாவதாக,

பங்குச்சந்தை என்பதை என்ன தெரியாத மாய வலை என்று எண்ணுவதை மாற்ற வேண்டும் ஒவ்வொரு நிறுவனமும் பங்குச்சந்தையில் தன் நினைத்த மூப்பாக நுழைய முடியாது. இதனை மேற்பார்வையிடவே SEBI (Security Exchanges Board of India) இருக்கிறது. ஒவ்வொரு அங்க அசைவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன/வரும்.

இரண்டாவது,

பங்குகள் மூலமாய் ஒருவர் பணக்காரனாக முடியுமா, முடியாதா என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு நிறுவனம் நன்றாக செயல்படுகிறதா?? இல்லையா?? என்பதை எப்படி அறிவது?? அதற்கான ஒரு குறியீடு தான் பங்குகளின் வர்த்தக நிலை. ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தை சார்ந்தே விலையேற்றமோ அல்லது இறக்கமோ பெறுகிறது. நல்ல பங்கு வர்த்தக அனுபவம் பெற்றவர் கணிப்புகள் என்றும் தவறி விடாதிருக்க அதிகமான சாத்தியங்கள் இதனால் தான் இருக்கிறது.

மூன்றாவது,

தற்போதைய உலகளாவிய பொருளாதார நிலை.

இதன் காரணகர்த்தா யார் என்றால் நான் ஜார்ஜ் புஷ்ஷைத்தான் சொல்வேன். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, ஒரு நாட்டின் சீர்குலைந்துபோன தொழில் துறையை தேர்ந்த நிபுணராக கையாலாது, ஒரு தேர்ந்த அரசியல் வாதியாக கையாண்டது முதல் தவறு. மக்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடைய துவங்கும் கால கட்டத்தில், எந்த வித உத்தரவாதமும் இல்லாது கடன்களை வாரி வழங்கச்செய்தது இரண்டாம் தவறு. ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த வித பாதையையும் தேர்ந்தெடுக்கலாம் எனும்போது, ஈராக் மீது போர்தொடுத்தது..(கவனிக்க ஆப்கானிஸ்தான் அல்ல)..புஷ்ஷின் மூன்றாம் தவறு. இவை அனைத்தையும் விட 150 ஆண்டுகள் பழமையான ஒரு நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்த்தது நான்காம் தவறு.

நான்காவது,
700 பில்லியன் டாலர்கள் (700,000,000,000 டாலர்கள் - இந்திய ரூபாயில் 35,00,00,00,00,000..எத்தனை சுழியங்கள்?? ::-)) கொடுக்கும் போது யாருக்கு கொடுக்கிறோம் என்ற கணிப்பின்றி இல்லாத எல்லோருக்கும் கொடுப்பதாக பாவலா செய்தது..உண்மையில் கொடுப்பதற்கான சட்டம் மட்டுமே கையெழுத்தாகியுள்ளது.

ஐந்தாவது,
அனைத்து வர்த்தகத்தையும் டாலர்களாக மட்டுமே மற்ற நாடுகள் செய்யவேண்டும் என்ற பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டது.
சதாம் ஹுசைன் தன்னுடைய எண்ணெய் வர்த்தகத்தை 'யூரோ'வாக மாற்றும் முயற்சி மேற்கொண்டதும் ஈராக் மீது அமெரிக்க போருக்கு ஒரு முக்கிய காரணியாகும் என விஷயம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இதற்கும் இந்திய அரசு 60 கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்வதும் சம்பந்தம் இல்லாதது. இங்கே இந்திய அரசு தன் பணத்தை கொடுக்கவில்லை. மாறாக, வங்கிகளின் கையிருப்பு சதவீதத்தை 1 சதவீதம் குறைத்துக்கொள்ள அனுமதித்துள்ளது. அதாவது, பையில வச்சிருக்கிற காச செலவு பண்ணுங்கன்னு வங்கிகளுக்கு அனுமதி. என்னடா இது, அவன் காச அவன் செலவளிக்கிறான், இவனுக்கு என்ன வந்துச்சுன்னு ரிசர்வ் வங்கிய யாரும் திட்டாதீங்க.

இங்க இருக்கிறதுல பாதிக்கும் மேல தனக்கு ஆபத்துன்னா மக்களோட காச செலவு பண்ணிடுவாங்க.. (வங்கிய பத்தி சொல்றேன்பா..) அதனால மக்களோட காச காப்பாத்துற அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதத்த வங்கிகள் கையிருப்பில் வச்சுக்கணும்னு சொல்லியிருக்கு. அந்த அளவ இப்ப குறைச்சுக்கிட்டாங்க. அம்புட்டுதேன்.

இதனால என்ன நன்மைன்னா, பணப்புழக்கம் மட்டும்தான். அந்த விஷயத்தில மத்திய அரசு செஞ்சது ஏன் சரின்னு சொல்றேன்..??

1. இப்ப பங்குச்சந்தை ஒரு நாட்டின் வர்த்தக நிலை, பொருளாதார நிலையை எடுத்துக்காட்டுகிறது. அது படுத்துவிட்டால்?? (பங்குச்சந்தையும்)..

2. பணப்புழக்கம் இருக்கும் போது, வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்த நிலை மாற வாய்ப்பு ஏற்படும்.

3. ஒரு சதவீதம் கையிருப்பை குறைப்பதால் எந்த தீங்கும் நேராது என்பது என் எண்ணம். (அதுக்காக மாசத்துக்கு 1% குறைச்சா நாமெல்லாம் ரோட்டுக்குத்தான் போகணும்..)

4. மத்திய அரசு பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.


எதிரா சொல்லணும்னா,
1. பங்குச்சந்தைக்கும் சாமான்யனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2. பங்குகள் சரிந்தாலும், உயர்ந்தாலும் விவசாயிகள் தற்கொலைகள் குறையப்போவதில்லை.

இதெல்லாம் நுனிப்புல் மேய்ந்த ஒரு கட்டடக்கலை மேஸ்திரியின் (Construction Supervisor) கருத்துதான். வல்லுநர்களின் கருத்துக்களுக்காக...

அன்புடன்,
சுபைர்
 
ஜுபைர்,





பங்கு சந்தை எப்படி இருக்கவேண்டுமென்று அழகாய் விவரித்துவிட்டீர்கள்.

முதலாவது ,



//ஒவ்வொரு அங்க அசைவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன/வரும்.//



கம்பெனிகள் எப்படி தங்கள் வருடாந்திர அறிக்கைகளை , கணக்குகளைத் தயாரித்து தருகிறார்கள் என்பது அந்தந்த கம்பெனிகளின் ஆடிட்டர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மட்டும் தெரிந்த ரகசியம்.



//ஒரு நிறுவனம் நன்றாக செயல்படுகிறதா?? இல்லையா?? என்பதை எப்படி அறிவது?? அதற்கான ஒரு குறியீடு தான் பங்குகளின் வர்த்தக நிலை. //



ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு அது தரும் வருடாந்திர லாபப் பங்கீட்டை மட்டும் பெற்றுவருபவர்கள் மிக மிக குறைவு. பங்குகளை விற்பவர் அவரின் பிற தேவைகளால் முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காக பங்குச் சந்தைக்கு வந்தாலும் அவரிடம் வாங்குபவர் அந்த நிறுவனம் தரப்போகும் வருடாந்திர லாபப் பங்கீட்டை மட்டும் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்யும் போது அதிக லாபமோ இழப்போ இருவருக்கும் ஏற்படக் காரணம் இல்லை. இப்படிப்பட்ட பங்கு வர்த்தகம் இன்றைக்கு நடக்கும் வர்த்தகத்தில் மிக மிக சொற்பமே.- இது முதல் வகை.

அது இல்லாமல் பங்குகளையே ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கி ஓரிரு தரகர்களின் துணையோடு விலையை செயற்கையாக ஏற்றி அதன் மூலம் லாபம் பெற முயலுபவர்களால் நிறுவனத்தின் செயல்பாட்டுக் குறியீடு உண்மைக்கு மாறாக பல மடங்கு உயர்ந்து விடுகிறது. இந்த கவர்ச்சியான போலிக் குறியீடுகளால் தற்காலிகமாக பெரும் லாபம் வரும். - இது இரண்டாம் வகை.



முதல் வகை முதலீட்டாளர்கள் மட்டுமே ஒரு பங்கு சந்தையில் இருக்கும் போது இவ்வாறான் மலைக்கும் மடுவிற்குமான ஏற்ற இறக்கங்கள் வர சாத்தியமில்லை. ஆனால் இரண்டாம் வகை முதலீட்டாளர்கள் தங்கள் முதலே தங்களின் வியாபார பொருள் ( முதலீட்டு/சேமிப்பு நோக்கத்துடனான முதல் இல்லை) என்பதால் இத்தகைய பெரும் ஏற்ற இரக்கங்களை உருவாக்கி விடுகிறார்கள்.



என்பதுகளின் ஆரம்பத்தில் பங்கு சந்தை பற்றி ஏதும் அறியா ரிக்க்ஷா ஓட்டும் சாமாண்யர்கள் கூட பங்குகளில் முதலீடு செய்து பின்னர் ஹர்ஷத் மேத்தா போன்றோரின் கைங்கர்யத்தால், தங்களின் வாழ்நாழ் சேமிப்பை முழுதுமாய் இழந்த கதைகள் ஏராளம். --இதிலே SEBI யின் கண்காணிப்பும், நிறுவனங்களின் செயல்பாட்டுக் குறியீடும் என்னவாயின என்பது வெட்ட வெளிச்சம்.

//சதாம் ஹுசைன் தன்னுடைய எண்ணெய் வர்த்தகத்தை 'யூரோ'வாக மாற்றும் முயற்சி மேற்கொண்டதும் ஈராக் மீது அமெரிக்க போருக்கு ஒரு முக்கிய காரணியாகும் //



-- உண்மையாக இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்.
. தற்போது வளைகுடா நாடுகள் அமெரிக்க டாலரை விட்டு விலகாதிருப்பதும் புஷ்ஷுக்கு பயந்துதானோ என்னவோ.



//

1. பங்குச்சந்தைக்கும் சாமான்யனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//



--சரியாகச் சொன்னீர்கள். தற்போதைய பங்கு சந்தை வீழ்ச்சி ஒரு பேராசையை சாமாண்யன் மனதில் தோற்றுவித்து, வங்கிகளும் பங்குகள் மீதான கடனை எளிதாக வழங்கினால், சில பணமுதலைகளின் தப்பித்தலுக்காக, பல ஆயிரம் சாமாண்யர்கள் பங்கு சந்தைக்குள் சிக்கும் அபாயம் இருக்கிறது.



//2. பங்குகள் சரிந்தாலும், உயர்ந்தாலும் விவசாயிகள் தற்கொலைகள் குறையப்போவதில்லை.//



இதுவேதான் என் கவலை. பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கும் அரசு, விவசாயிகளின் தற்கொலைக்கும், நாட்டின் உள் கட்டுமான வசதிகளுக்காகவும், மின் உற்பத்திக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், நதிநீர் இணைப்புக்கும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

பணப்புழக்கத்தை அதிகரிக்க பங்கு சந்தையை தூக்கி நிறுத்துவது மட்டுமே வழியில்லை. மேற்கண்ட திட்டங்கள் மூலமும் முடியும் என்பதுதான் என் கருத்து.

நமக்குத் தெரிந்த வரைதான் இதெல்லாம். நீங்கள் சொல்வது போல வல்லுனர்களின் கருத்துக்கள் வேறாக கூட இருக்கலாம்.



இன்றைய உலக பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது விளங்கக் கூடும் என்பதால் இங்கே ஒரு பதிவை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்.




QUOTE ========


Published in The Hindu - Sunday Magazine on Oct 5, 2008

The bursting of the speculative bubble in the U.S. housing market has destroyed billions of dollars in investor wealth across the world, crippled the banking system, expunged close to a million jobs…and India has not been spared either. With banks failing by the day…definitely, these are uncertain times for the financial services industry. While many people who have lost their jobs, are faced with permanent shrinkage of their lifestyle, others in the industry are going through the trauma of not knowing if and when their turn would come. Who is to blame?

Flashback to year 2003:

Rohit (name changed to protect identity), a good friend of mine and someone who was officially considered to be a genius with an IQ of 150+, graduated from one of the leading IIM's. Rohit managed to make it into the New York Headquarters of the most sought after firm that had arrived on campus for the first time – Lehman Brothers – a top U.S. Investment Bank (then). On joining, he was assigned to Lehman's mortgage securities desk that dealt with Collateralized Debt obligations (or CDO's).

Following is an extracted transcript of a chat session I had with Rohit back in 2004:

Me: So man, you must feel like you are on top of the world.

Rohit: Yes dude, the job here is amazing, I get to interact with people around the world, investment managers – who want to invest millions of dollars

Me: great…so tell me something interesting. What's your job all about?

Rohit: You know there is a great demand for American home loans, which we buy from the U.S. banks. We then convert these into what is called as CDO's (Collateralized Debt Obligations). In plain English – this refers to buying home loans that banks had already issued to customers, cutting them into smaller pieces, packaging the pieces based on return (interest rate), value, tenure (duration of the loans) – and selling them to investors across the world after giving it a fancy name, such as 'High Grade Structured Credit Enhanced Leverage Fund'.

Me: Wow! I would've never guessed that boring home loans could transform into something that sounds so cool!

Rohit: hahaha…actually we create multiple funds categorized based on the nature of the CDO packages they contain and investors can buy shares in any of these funds (almost like mutual funds…but called Structured Investment Vehicles or SIV's)

Me: Dude, you make your job sound like a meat shop…chopping and packaging. So, in effect when an investor purchases the CDO's (or the fund containing the CDO's), he is expected to receive a share of the monthly EMI paid by the actual guys who have taken the underlying home loans?

Rohit: Exactly, the banks from whom we purchased these home loans send us a monthly cheque, which we in turn distribute to the investors in our funds


Me: Why do the banks sell these home loans to you guys?

Rohit: Because we allow them to keep a significant portion of the interest rate charged on the home loans and we pay them upfront cash, which they can use to issue more home loans. Otherwise home loans go on for 20-30 years and it would take a long time for the bank to recover its money.

Me: and, why does Lehman buy these loans?

Rohit: Because we get a fat commission when we convert the loans into CDO's and sell it to investors

Me: Who are these investors?

Rohit: They include everyone from pension funds in Japan to Life Insurance companies in Finland

Me: But tell me, why are these funds so interested in purchasing American home loans?

Rohit: Well, these guys are typically interested in U.S. Govt bonds (considered to be the safest in the world). But unfortunately, Mr. Alan Greenspan (head of Federal Reserve Bank – similar to RBI in India) has reduced the interest rate to nearly 1% to perk up the economy after the dot-com crash & Sep 11 attacks. This has left many funds looking for alternative investments that can give them higher returns. Home loans are ideal because they offer 4-6% interest rate.

Me: Wait, aren't home loans more risky than U.S Bonds?

Rohit: We have made home loans less risky now. In fact they have become as safe as U.S Govt bonds.

Me: What are you saying, man? What if the people who have taken these underlying home loans default? Then the investors would stop getting the EMI's, and their returns would take a hit. Wouldn't it?

Rohit: Boss, may be some will default, but not definitely more than 2-3% of them. Moreover, we have convinced AIG (a leading insurance company) to insure our CDO's. This means that even if there were big defaults – the insurance company would compensate the investors.

Me: that's amazing. What are these insurances called?

Rohit: Credit Default Swaps

Me: Definitely you guys are the most creative when it comes to naming.

Rohit: Thanks

Me: and why has this AIG guy insured millions of home loans?

Rohit: see man, the logic is simple. Home prices in the U.S always go up. In fact over the last 3 yrs alone they have doubled. So even if someone defaults paying the EMI, the home can be seized and sold for a much higher price. So there is no risk. Insurance companies are actually competing to insure this, because they can earn risk-free premiums.

Me: no wonder investment managers from all over the world want to put money in your CDO's.
*end of conversation extract*

NINA and the Housing Bubble
A global financial cobweb started getting built around the American dream of purchasing a home and it rest on the assumption that "home prices will keep rising". As demand for the CDO's started growing across the global investment community, the investment bankers (like Lehman) who were meant to sell these instruments also started investing a significant portion of their own capital in these. I guess after selling the story to the whole world, they themselves got sold on the seemingly foolproof concept. Gradually the markets for CDO's and Credit Default Swaps started expanding with traders and investors buying and selling these as if they were shares of a company, happily forgetting the underlying people behind these products who took the home loans in the first place and on whose capacity to repay the loans, the safety of these products depended.

As Wall Street firms like Lehman were churning more and more home loans into CDO's and selling them or investing their own money, there was a pressure on the banks to issue more loans so that they can be sold to the Wall Street firms in return for a commission. Slowly banks started lowering the credit quality (qualification criteria) for availing a home loan and aggressively used agents to source new loans. This slippery slope went to such an extent that in 2005, almost anyone in the U.S could buy a home worth $100,000 (45 lk INR) or more – without income proof, without other assets, without credit history, sometimes even without a proper job. These loans were called NINA – 'no income no assets'.

The U.S. housing market went into a classic speculative bubble. Home loans were easy to get, so more and more people were buying houses. The increased demand for houses caused the price to increase. The rising prices created even more demand, as people started to look at homes as investments -- investments that never went down in value.
When I touched base with my friend Rohit in late 2005, he was on cloud nine. During the previous one year, he managed to buy a home in Long Island (a posh area near New York City) worth almost a millions dollars, and got himself a Mercedes. All this was interesting to hear, but what shocked me was that although he was earning close to $20,000 a month (that is what CEO's in India make) he was not able to save anything because his lifestyle expenses where growing faster than his salary.

The popping of the Housing Bubble

In late 2006, Mortgage lenders noticed something that they'd almost never seen before. People would choose a house, sign all the mortgage papers, and then default on their very first payment. Although no one could really hear it, that was probably the moment when one of the biggest speculative bubbles in American history popped. Another factor that lead to the burst of the housing bubble was the rise in interest rates from 2004-2006. Many people had taken variable rate home loans that started getting reset to higher rates, which in turn meant higher EMI's that borrowers had not planned for.

The problem was that once property values starting going down, it set off a reverse chain reaction, the opposite of what had been happening in the bubble. As more people defaulted, more houses came on the market. With no buyers, prices went even further down.
In early 2007, as prices began their plunge, alarm bells started going off across mortgage backed securities desks all over Wall Street. The people on Wall Street, like Rohit, started getting calls from investors about not getting their interest payments that were due. Wall street firms stopped buying home loans from the local banks. This had a devastating effect on particularly the small banks and finance companies, which had borrowed money from larger banks to issue more home loans thinking they could sell these loans to Wall Street firms like Lehman and make money.

Everyone got into a mad scramble to seize and sell the homes in order to get back at least some of the money. But there were just not enough buyers. The guys who had insured these loans thinking they had near zero risk (e.g. AIG) could not fulfill the unexpectedly huge number of claims. The best part was that since these insurance policies (credit default swaps) could themselves be traded, multiple people had bought and sold them, and it became so tough to even trace who was supposed to compensate for the loss.

Back to 2008: The carnage

The global financial cobweb built around mortgages is on the brink of collapse. Firms, large and small, some young some as old as a 100 years have crumbled as a result of suing each other over the dwindling asset values. Lehman's India operations- that employed over a thousand staff is up for sale and many of the employees have been asked to leave. The Indian stock market has crashed almost 50% from its high (and so have markets around the world) as the Wall Street giants sold their investments in the country in an effort to salvage whatever is good in order to make up for the mortgage related loss. Hedge funds, pension funds, insurance companies all over the world have lost billions in investor's money. Many Indian Bschool graduates with PPO's (pre-placement offers) in the financial sector (India and abroad) have either received an annulment or indefinite postponement of joining dates. IT firms that built and maintained software for the U.S. mortgage industry or the related Investment Banks, have shut down their business units, laid-off people or transferred them to other verticals.

For all the hoopla over the sharp and sophisticated people on Wall Street, the current financial crisis has exposed the fragility of the system. Wall Street is blaming the entire episode on people who could not repay their home loans. But the reality seems to point towards the stupidity of people who lent all this money, financial institutions that built fancy derivative packages and in effect facilitated billions in trading and investments in these fragile low quality loans.

The U.S. Govt is planning to grant 700 billion dollars to the Wall Street firms to compensate the financial speculators for the money that they have lost. Isn't this like rewarding greed and stupidity? The head of a leading Investment Bank has stated, "This is necessary to sustain financial ingenuity. We don't want to spend this money on ourselves. We just want this money to go into the market so that we can carry on trading complex securities, borrowing and lending money." (Yeah…right, so that one can act as if nothing had happened without analyzing too much into it). The real question is: who is going to compensate the common investors across the world who have lost their wealth in the resultant market meltdown? (either directly or through pension funds).

After being unreachable for a month now, finally I heard back from my pal, Rohit, saying he is back in India to take a break from the roller coaster ride that he had lived through. After Lehman's collapse he has lost his job and probably the house that he had bought by taking a hefty loan. I really don't know whether to feel happy for him, for getting an opportunity to learn a lesson or two from the experience or to feel sad for him for losing his job. May be I'll get a better sense of things once I meet him next week.

Shyam Pattabi is a career finance professional. He writes a fortnightly column 'FISCALLY FIT' for The Hindu- Sunday Magazine

== unquote

சிறிது நீண்ட பதிவு. சுருக்க/தவிர்க்க முடியவில்லை. பொருத்துக் கொண்டு படித்ததற்கு நன்றி.

அன்புடன்,

மு.வெற்றிவேல்.
 
from jafar sadik Re: சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி


நான் பல வருடக் கணக்கில் பங்குச் சந்தையையும், அதன் புள்ளிகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென எண்ணி மிகவும் குழம்பியிருக்கிறேன். கணக்கில் வியாபாரத்தில் புலிகள் என நான் எண்ணி இருந்தவர்களிடம் கேட்டும் கூட இந்த சந்தை புள்ளிகளை எப்படி கணக்கிடுகிறார்கள் என்ற விபரம் இதுவரை எனக்கு கிட்டியதில்லை. எனினும், பதிவால் அடிப்படை புரிந்தது. திரு வெற்றிவேல் பதிவு செய்த ஆங்கில பதிவு அடிப்படையே புரியாதவர்களுக்கு இதை விட சிறப்பாக விளக்க முடியுமா என்று கேட்குமளவுக்கு விஜய தசமி அன்று பங்குச் சந்தையின் நுணுக்கத்தை கை பிடித்து சொல்லிக் கொடுத்தது.


நல்ல வேளை! இதை பற்றி நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஏனெனில், என்னை என் மனைவியும், என் உறவினர்கள், நண்பர்கள் பலரும் பலமுறை பங்குச் சந்தையில் முதலிடச் சொல்லியும், நான் எனக்குத் தெரியாத விசயத்தில் கால் வைப்பதில்லையாதலால், நான் துளி கூட ஆர்வப் பட்டதில்லை. "நீங்கள் செய்யும் செயல் நீதியானதா? அல்லவா? என்ற சந்தேகம் உள்ளதெனில் அதை செய்யாமல் விட்டுவிடுங்கள்" என்று ஒரு ஹதீஸ் உண்டு. அதை நான் முழுவதுமாக நீதிச் செயல்களுக்கு கடை பிடிக்கிறேனோ இல்லையோ ஆனால் என்னுள் தூண்டப்படும் பண ஆசையை அடக்கி என் முதலீட்டை நஷ்டமாக்காமல் இருக்க நிச்சயமாக கடை பிடிக்கிறேன். தெரியாத விஷயங்களில் இறங்குவதேயில்லை.

பங்குச் சந்தை செயல்பாட்டினை இப்போது தெரிந்து கொண்டதால் இரட்டிப்பு லாபம். ஏனெனில் அப்போது பங்குச் சந்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதன் மேம்போக்கான மாயையும் மட்டுமே அறிந்திருந்தனர். அதன் பின்னால் ஒளிந்திருந்த இன்னொரு மாயை ரோஹித் போன்ற பங்கு முதலைகளுக்கே இன்றும் கூட புரியவில்லையே. கணிப்பில் செய்யப்படும் வியாபாரம் தோல்வியடையலாம் என்பது இயற்கைதான். ஆனால் பணம் எங்கு போனது? யாரை குற்றம் சாட்டுவது? நஷ்டப்பட்ட பணம் எங்கு சென்றது என்றே கணிக்க முடியவில்லை என்றால் அது அழிவில் கொண்டுவிடும் வியாபாரமல்லவா? "We learn from mistakes" என்று அடிக்கடி சொல்லப்படும் வாசகத்தைக் கூட இந்த வியாபாரம் பொய்யாக்கி விட்டது. ஏனெனில், தவறு எங்கு நடந்தது? ஏன் நடந்தது என்றே தெரியவில்லை. இவற்றில் முதலிடாத என்னை போன்றவர்களுக்கு இரு மாயைகளும் ஒரே நேரத்தில் விளங்கின. இது எனது பொறாமை என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது உங்கள் அறியாமை.

நீதியற்ற உடல் உழைப்பிலாத வட்டி நிறைந்த பேராசை பிடித்த (இது பேராசைதான். காரணம் மற்றவன் வட்டியில்தான் வாழ நினைக்கிறோம்) இதெல்லாம் ஆரம்ப கால கட்டங்களில் கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், கடைசியில் அழிவில்தான் முடியும் என்பதை பலமுறை பார்த்து அனுபவித்து வருகிறோம். உ.ம். கடன் அட்டைகள் குடும்பம் குடும்பமாக அழிப்பதையும், Gold Quist (not sure of Spelling) Chain Marketing சில வருடங்களாக செய்திருக்கும், செய்துகொண்டிருக்கும் அட்டுழியங்களையும் கண்கூடாக கண்டு வருகிறோம்.

இனி மிக எச்சரிக்கையாக நடந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். தம்பி சுபைருக்கும், திரு வெற்றி வேல் அவர்களுக்கும் அழகிய விளக்கங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
சாதிக்
 
from Ahamed Zubair A Re: சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி
அழகான விளக்கம்...

ஆங்கிலத்தில் Sub-Prime Loan என்று ஒரு விஷயம் சொல்வார்கள்..

அமெரிக்கர்களின் வாங்கு திறனை அதிகரிக்க, எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கடன் தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணி என்கிறார்கள்.

அதாவது, நம்ம ஊர் புரோ நோட்டு கடன் மாதிரி. நம்ம ஊர்ல கடன் வராட்டி ஆட்டோ அனுப்பலாம். அங்க முடியாது. மஞ்சள் கடுதாசி கொடுத்திட்டாங்க..

//கம்பெனிகள் எப்படி தங்கள் வருடாந்திர அறிக்கைகளை , கணக்குகளைத் தயாரித்து தருகிறார்கள் என்பது அந்தந்த கம்பெனிகளின் ஆடிட்டர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மட்டும் தெரிந்த ரகசியம்.//

உண்மை வெற்றிவேல் ஐயா, வருடாந்திர கணக்குகள் உருவாவதை நானும் கண்கூடாக கண்டிருக்கிறேன். சவூதியிலும் Joint Venture, இங்கு துபாயிலும் Joint Venture - தனி கம்பெனி அதிகாரம் இருந்தது. அதனால் வருடாந்திர கணக்குகளின் அத்தனை நெளிவு, சுளிவுகளும் கண்டிருக்கிறேன்.

பங்குச்சந்தை என்பதை தீண்டத்தகாதது என்று என்னால் ஒதுக்கிவைக்க முடியாது. அன்னிய முதலீடுகள் இல்லாது ஒரு நாடு வேகமான வளர்ச்சியை எட்ட முடியாது.

1991க்கு முந்தைய இந்தியாவும், இப்போதைய இந்தியாவும் வேறு வேறு என்பது எல்லோருக்கும் தெரியும்.

அன்னிய நாடுகள் முதலீடு செய்ய வேண்டுமானால், புதிய நிறுவனங்களின் மூலமாக, அதன் பங்குகளின் மூலமாக மட்டுமே இயலும். அந்த நேரத்தில் பங்குச்சந்தையின் நிலை பரிதாபகரமாக இருந்தால் யார் என்ன செய்வார்கள்?? இதுபோன்ற நடவடிக்கைகளே பங்குவர்த்தகத்தை சீர்படுத்தும்.

இதெல்லாம் விட முக்கியம், இந்திய அரசு எந்த முடிவை எடுத்தாலும் தனியாக எடுக்க முடியாது. கூட்டணி, கட்சி, அரசியல், அமைச்சரவை, நாடாளுமன்றம், இன்ன பிற அமைப்புகளிடமும் அதிகாரமிருப்பதால், அரசின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதில் எந்தவித கருத்துவேறுபாடும் ஏற்பட்டதில்லை.

இதைத்தான் இந்திய நாட்டின் இறையாண்மை என்கிறோம்..எந்த ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் இருப்பவர்களும் தன்னால் தேசத்துக்கு கெடுதல் நிகழாதவாறு முயற்சிக்கிறார்கள் என்பதே என் மாற்ற இயலாத எண்ணம். அதனால், அரசினை விமர்சிக்கக்கூடாது என்பதல்ல என் முடிவு..விமர்சனங்கள் உரமாக இருக்கவேண்டுமே தவிர, கோடரிகளாக மாறிவிடக்கூடாது என்பதே அவா.

இதெல்லாம் தாண்டி இன்றைய செய்தி,

"இந்தியன்" விமான நிறுவனம் 1 பில்லியன் டாலரை வட்டியில்லாக்கடனாக இந்திய அரசிடம் கேட்டிருக்கிறது.

என்னமோ நடக்குது..!!!

அன்புடன்,
சுபைர்
 
from Bala Re: சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி


Dear Friends,

Since I have problem in my Tamil Font I am continuing this stream in english. Pardon me.

What Mr Vetrivel has said is absolutely true and I also wanted to share the same article published in 'The Hindu' with you all to demystify the sub-prime lending and the derivatives market.

While the common man is unconcerned about the stock market, the money market and financial system of the conuntry has made it in integral part of the common man even without his knowledge.

Stock market apparently deals with the stock of the companies listed. And people trade the same for their own profit. In such situations, it is just the surplus money one has got, is invested in the market. The funds of organizations like banks, companies, Foreign Institutional investors are also invested there to make some gains. When market goes up or down the gains or losses also goes up or down.

Especially, when the market goes down, the funds sell the shares to stop making further loses and when it is bought by someone else (for every seller there is a buyer in the market) they withdraw funds from the banking system. This happens in a large scale when the market is in panic mode.

In such situations, banks finds the money difficult to come by for their normal operations, since they also play in the market. They stop financing the companies including the manufacturing companies for their day to day working capital needs.

When working capital needs are not met, the prodcution is cut. This was what we witnessed when the IIP data for August was released. What was about 10;9 in Aug 2007 was 1.19% in August 2008. Analysts interpret this data as virtually a 'zero' state of production.I do not to dwell more on this, since there are many factors for this fall.

Added to this, what we witnessed last week was the rumour (atleast let us belive it so for the time being) about ICICI bank not having enough liquidity - meaning that they cannot repay the deposits. This kind of situation is dangerous for any banks, leave alone ICICI. Such rumours may trigger financial tsunami in the form of common man rushing to the nearest ATM to pull out his savings, go to the bank to withdraw the balance from his account or attempt to transfer the money to other banks. Too much damage would be done, before the situation is really understood and the confidence is restored in the bank. Before that the bank may even collapse due to this 'run'. Obviously as you all are aware, if every or most of the depositors withdrew money, banks cannot pay them since their money is advanced to borrowers. Eventhough the bank have the right to repay the money only on the due date of fixed deposits none of the banks in the system do so as it will shaken the confidence of the depositors.

To avoid this, what was done was to reduce the CRR (Cash reserve ratio). This is the liquid cash kept with RBI by the commercial banks to meet any liquidity crisis. CRR and SLR (Statuory Liquidity Ratio) are the two instruments that are normally used by the fiscal system to manage the liquidity in the market. Interest rates (Prime lending rate and Deposit rate) are used to control inflation. When the CRR is reduced, the banks need to keep less money with the RBI and the extra money is released to the bank to continue financing the operations. Banks would only judiciously use this money to finance companies that are in need and would not normally venture this for speculative reasons. This would ease the liquidity crunch faced by the industries and help them to restart their operations. Once the cycle is normal the CRR will be upped again. Together CRR (7.5%) and SLR (25%) constitute major chunk of the deposits kept with RBI. This is to regulate the money supply available with the banks. Adjustment in these rates are normally part of fiscal policy announced by RBI.

On the contrary, the interest rates (Prime Lending rate 12.5 to 13.5%, Savings Bank 3.5%, Term deposits 7.5 to 9.60%) are used to control money supply avialable with common men. This is to some extent based on playing with the sentiments of individual. When the lending rate is raised people hesitate to borrow and the spending will become less. Also increasing the deposit rate will result in more money coming into the banking system. These will reduce the money supply in the market and unnecessary spending will be reduced and inflationary pressures will ease. To curtail the real estate going over board, the HL rates were increased and less number of houses were sold or bought and hosuing market stabilised. These rates would be adjusted as and when needed based on the data available with RBI.

Had RBI and ministry not intervened last week, the situation might have gone to worst. Stock market crash was ONLY one of the reasons and there are various other reasons that affected the common man that prompted this action.

To be frank, I was worried about my deposits with ICICI when I heard this rush on ICICI stock. I could only pray sitting in Riyadh.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?