.comment-link {margin-left:.6em;}

Saturday, February 14, 2015

 

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்





திருஞானசம்பந்தர் அருளிய
கோளறு திருப்பதிகம்






வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டோடு ஆறும் உடனாய நாட்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறையோது மெங்கள் பரமன்

நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்


அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே


வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்

நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவை யோடுகொலை யானை கேழல் கொடுநா கமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடு முடனாய்

வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடு மிடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



பலபல வேட மாகும் பரன்நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடு எருக்கும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்வரு காலமான பலவும்

அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னிவளர் செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே




Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?